ஐக்கிய அரபு அமீரக மக்கள் பணத்தின் அருமை தெரியாதவர்கள் என்று சித்தரிக்கும் காணொலியை யூடியூப்பில் பதிவேற்றிய நபர் கைது...!

0 13693

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் பணத்தின் அருமை தெரியாதவர்கள் என்பது போல் தவறாக சித்தரிக்கும் காணொலியை யூடியூப்பில் பதிவேற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.

அரபு அமீரகத்தில் வசித்துவரும் வெளிநாட்டு நபர் ஒருவர், அரபு ஷேக் போல் உடையணிந்து, பண கட்டுகளை சுமந்துவரும் உதவியாளர்களுடன் சொகுசு கார் வாங்க செல்வது போல் அந்த காணொலி படமாக்கப்பட்டுள்ளது.

ஷோரூம் ஊழியர்களுக்கு பணக்கட்டுகளை வீசி காபி அருந்த சொல்லும் அந்த நபர், 5 கோடி ரூபாய் ஃபெராரி காரை ஷோரூம் உரிமையாளர் காட்டியபோது தனது ஓட்டுநர் தான் இத்தகைய மலிவான கார்களை பயன்படுத்துவார் என ஏளனமாக சொல்கிறார்.

பின் ஓளடி, மெர்சிடீஸ், பெராரி, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்களின் 4 விலை உயர்ந்த கார்களை தேர்வு செய்கிறார்.

அமீரக மக்கள் பணத்தின் அருமை தெரியாதவர்கள் என்ற முடிவுக்கு பார்வையாளர்களைத் தள்ளும் வகையில் இந்த காணொலி படமாக்கப்பட்டுள்ளதால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments