ஐஸ்லாந்தில் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெடித்த எரிமலை..ஓராண்டுக்குள் 2வது முறையாக வெடித்ததாக தகவல்..!!

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது.
ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது.
ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக வெடித்த இந்த எரிமலை, அந்நாட்டின் பெரிய விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள போதிலும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு எரிமலை வெடித்த போது, பல மாதங்களுக்கு தீக்குழம்பு வெளியேறி வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments