பாரதிய ஜனதா அரசு பிரிவினைவாத அரசியல் செய்வதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!!

0 1350

பாரதிய ஜனதா அரசு மத்தியிலும், மணிப்பூரிலும் பிரிவினைவாத அரசியல் செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவரது கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களைச் சந்திப்பதற்காக 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு 14ம் தேதி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன் தலைமை வகிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் பிளவுபடுத்தும் கொள்கைகள் இனக்கலவரத்திற்கு வழி வகுத்துள்ளதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments