30 வயதில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞர்.. மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய கோரிக்கை

0 1942
30 வயதில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞர்.. மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் அருகே இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞர் ஒருவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தச்சன்விளை கிராமத்தை 30 வயதான முத்துக்கிருஷ்ணனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததாகவும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வாரம் இரண்டு நாட்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மகனின் உடல்நிலை குறித்த கவலையால் முத்துகிருஷ்ணனின் தாய் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், வயதான தந்தை மற்றும் திருமணமாகாத தங்கையுடன் வீட்டு வாசலில் சிறிய பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments