சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை..கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு..!

சென்னை மயிலாப்பூரில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது.
மயிலாப்பூர் பல்லக்குமாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா.இவர் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது ஒரு கொலை உட்பட 25 வழக்குகள் உள்ளன.
சிறையில் இருந்து வெளிவந்த இவர் மதுராந்தகத்தில் வசித்து வந்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த இவர் பாஜக பட்டியல் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் மயிலாப்பூரில் உள்ள தமது சகோதரர் மகள் வழக்கறிஞர் பணிக்கு முதல் நாள் செல்வதையொட்டி வாழ்த்த சென்று இருந்தார்.
அப்போது இவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியதாக சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் போலீசார் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
Comments