சேலம் பைனான்சியரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்... இதுவரை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தது கண்டுபிடிப்பு...!

0 1777

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கை உருவாக்கி , சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் மூர்த்தி என்பவருக்கு காதல் வலைவீசிய ரஷிதா என்ற பெண், கடந்த மார்ச் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதையடுத்து, கடந்த 5 ஆம் தேதி ரஷிதா திடீரென காணாமல் போனார். வீட்டில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம், 5 சவரன் நகை மாயமானதையடுத்து, மூர்த்தி தெளாசம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.

விசாரணையில் ரஷிதா நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் என்பதும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுவரை 8 பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கோவை துடியலூரில் இவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெயர்களில் ஆண்களுடன் பழகிய ரஷிதா, ஆபாசமாக சாட்டிங் செய்து பின்னர் அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments