காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள் 2 பேர் பலி...!

0 2849

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இரு வீரர்களும் சூரன்கோட் போஷானா என்ற இடத்தில் முகல் சாலை அருகே ஆற்றைக் கடந்து கொண்டிருந்தபோது, திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் அவர்களை மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டனர்.

பாங்க்ரூ பகுதியில் மண்சரிவில் சிக்கிக் கொண்ட பேருந்தில் பயணித்த 2 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். ரம்பன் மாவட்டத்தில் உள்ள செனாஃப் ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால், கரையோர பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விலகி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ரீசி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சேதமடைந்து இருந்த சாலையில் சென்ற சரக்கு லாரி பள்ளத் தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments