'டைட்டானிக்', 'அவதார்' திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தனது 102 ஏக்கர் எஸ்டேட்டை விற்க முடிவு...!

0 29124

அவதார் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தனக்கு சொந்தமாக 102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எஸ்டேட்டை 270 கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிபோர்னியாவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அந்த எஸ்டேட்டில் 8000 சதுரடி பரப்பளவில் 5 படுக்கை அறைகளுடன் கூடிய பங்களா ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், கெஸ்ட் ஹவுஸ், அலுவலகம், பனை மரங்களால் சூழப்பட்ட குளம் போன்ற பல்வேறு சொகுசு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

தனது 5-வது மனைவி சுசி உடன் பெரும்பாலும் நியூயார்க்கில் வசிப்பதால் எஸ்டேட்டை விற்கும் முடிவிற்கு ஜேம்ஸ் கேமரூன் வந்துள்ளார்.

பணம் அதிகம் உள்ளது என்பதற்காக சொத்துக்களாக வாங்கி குவித்து இயற்கை வளங்களை வீணடிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments