மெக்சிகோவில், வீட்டிற்குள் புகுந்து பத்திரிகையாளரை கடத்தி போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்...!

0 1017

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தி செல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

59 வயதாகும் லூயி மார்டின், நயாரீட் நகரில் வசித்துவந்தார். வியாழக்கிழமை, மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அவரது கணிணி, செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றையும் அந்த கும்பல் திருடி சென்றது. சனிக்கிழமை காலை புறநகர் பகுதியில் பிளாஸ்டிக் பையில் வைத்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மெக்சிகோவில் கடந்த 20 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments