பீரோ கனமில்லை எனக் கொடுமை ... நண்பர்களை கூட்டி வந்து டார்ச்சர்... ஆவேசமான பள்ளி ஆசிரியை.... ஆவேசத்தால் அதிர்ந்த காவல்துறையினர்..!
சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், காவல் துறையினரின் குறைதீர்வு கூட்டத்தில் ஆவேசமானதால் போலீசார் திக்குமுக்காடி போயினர்
சென்னை மாநகர காவல்துறை சார்பில், 12 காவல் மாவட்டங்களிலும், தீர்வு எட்டப்படாமல் உள்ள பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க, குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்றன. பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களின் புகார்கள் குறித்து கேட்டறிந்து, தீர்வு காண உத்தரவிட்டனர்.
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்தக் குறைத் தீர்ப்பு முகாமில், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவர் மீது புகார் அளிக்க, தனது தாய் மற்றும் சகோதரருடன் வந்திருந்தார். தனியார் பள்ளி ஆசிரியரான தனது கணவர் அவரது நண்பர்களை அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தல் தருவதாக ஆவேசமான அந்த ஆசிரியையை போலீசார் சமாதானப்படுத்த முயற்சிக்க, வழக்கை விசாரிக்காமல் அலைக்கழித்த பெண் காவல் ஆய்வாளர் மீதும் பகிரங்க புகார் தெரிவித்தார்
இதையத்து இரு தரப்பையும் தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதேபோன்று, சங்கவி என்ற 5 மாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் அழுது கொண்டே போலீஸ் முன்னிலையிலேயே தனது கணவரை தாக்க பாய்ந்தார்.
சங்கவிக்கும், புளியந்தோப்பைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் அரவிந்த் என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து சங்கவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு தனது நண்பன் வீட்டில் உள்ளது போல், ஏன் கனமான பீரோவை திருமண சீராக வாங்கித் தரவில்லை என கேட்டு தாக்கியதாவும், வீட்டை விட்டு தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து விசாரிக்கும் போது, 5 மாத கர்ப்பிணியான சங்கவியை அவர் கர்ப்பமாக இல்லை எனவும், அவர் தனக்கு வேண்டாம் எனவும் கணவரான அரவிந்த் கூறியதால் அழுது கொண்டே ஆவேசமடைந்து பெண், போலீஸ் முன்னிலையிலேயே தாக்க முயன்றார்.
இதே போல் புகார் அளிக்க வந்த பெண் ஒருவர் ஏற்கனவே கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லையென கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அப்போது, தனது மகனை பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு விழுந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் சலசலப்பு ஏற்பட்டது. புகார் அளிக்க வந்தவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில், காவல்துறையின், பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், தனது மகள் வழி பேத்தி, மீண்டும் நகையை திருடிவிட்டதாக, பாட்டி ஒருவர் புகாரளித்தார். அப்போது அவருக்கும், அவரது மகள் மற்றும் பேத்திக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், பாட்டிக்கு மயக்கம் ஏற்படும் சூழல் உருவாக, தண்ணீர் கொடுத்து போலீசார் ஆசுவாசப்படுத்தினர்.
Comments