குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுமாறும், தமிழ் உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டுமாறும் கேட்டுக் கொண்டார். கோயில்கள் மிகச்சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் நீதிக்கட்சி இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.
Comments