கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில், சாம்சங் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 96 சதவீதம் சரிவு....!

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில், சாம்சங் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 96 சதவீதம் சரிந்துள்ளது.
தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகிலேயே அதிகளவிலான ஸ்மார்ட் போன்களையும், சிப்-களையும் தயாரித்துவருகிறது.
கடந்தாண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்நிறுவனம் 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில் நடப்பாண்டில் அதே காலகட்டத்தில் மூன்றாயிரத்து 800 கோடி ரூபாயாக வருவாய் சுருங்கியது.
சாம்சங் நிறுவனத்தின் நிகர லாபத்தில் அதன் சிப்கள் முக்கிய பங்கு வகித்துவந்த நிலையில், உலகளவில் சிப் உற்பத்தி அதிகரித்தால் சர்வதேச சந்தையில் அவற்றின் விலை கணிசமாக குறைந்தது.
இதனால் சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்து வைத்துள்ள சிப்களின் மதிப்பு சரிந்து மிகப்பெரிய நஷ்டத்திற்கு வழிவகுத்துள்ளது.
Comments