அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை எழுதித் தருமாறு கேட்டு மிரட்டி வருவதாக தி.மு.கவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் மீது இளைஞர் புகார்...!

0 4770

மதுரை வாடிப்பட்டியில் அரசு வழங்கிய 2 ஏக்கர் விவசாய நிலத்தை எழுதித் தருமாறு கேட்டு தி.மு.கவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் மிரட்டி வருவதாக எஸ்.பியிடம் இளைஞர் ஒருவர் புகார் அளித்தார்.

ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு கடந்த 2007-ம் ஆண்டு அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் அவரது மகன் மாயக்கிருஷ்ணன் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தை பேரூராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக எழுதித் தர வேண்டுமென பேரூராட்சித் தலைவர் பால்பாண்டி மிரட்டி வருவதாக புகார் அளித்துள்ள மாயக்கிருஷ்ணன், நிலத்திற்கு செல்ல முடியாத வகையில் கேட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ள பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, தனக்கு தெரிந்த பையன் என்பதால் பேரூராட்சி குப்பை கிடங்கிற்கு நிலத்தை கொடுக்கும் படி கேட்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments