சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
நீதிமன்றத்தில் பரபரப்பு... வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்தவர் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல்...!

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ரௌவுடியை மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றனர்.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு கள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தனது சகோதரர் பாஸ்கர் என்பவரின் கொலை வழக்கில் சாட்சி சொல்வதற்காக தனது நண்பருடன் லோகேஷ் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.
நீதிமன்றம் அருகே டீக்கடையில் அவர்கள் டீ குடித்துக் கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், லோகேஷ் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். வெட்டியவர்கள் யார், காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments