ஐ.நா.வின் உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடையும் பணியில் மனித உருவ ரோபோக்கள் நியமனம்..!

0 1357

ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பணியில் மனித உருவ ரோபோக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் சமமான கல்வி, புவி பாதுகாப்பு என உலக மக்களின் நலனுக்காக 17 நிலையான வளர்ச்சிகளை 2030-ம் ஆண்டுக்குள் அடைய கடந்த 2015-ம் ஆண்டில் ஐ.நா. இலக்கு நிர்ணயித்தது.

ஆனால் இலக்குகளை நோக்கிய பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அதனை போராடி அடைய ஏராளமான மனித உருவ ரோபோக்களை ஐ.நா. பணியமர்த்தியுள்ளது. இந்த ரோபோக்களின் மாநாட்டை ஐ.நா.வின் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு சுவிட்சர்லாந்தில் நாளை நடத்துகிறது. இதனையொட்டி மாநாட்டில் பங்கேற்கவுள்ள ரோபோக்களின் கண்காட்சி ஜெனிவாவில் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்தில் நாளை நடைபெறவுள்ள ரோபோக்கள் மாநாட்டில், உலகில் முதல்முறையாக, ரோபோக்கள் குழு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments