தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
இங்கிலாந்தில் கம்பளிப் புழுக்களால் பொதுமக்கள் கடும் அவதி...!
இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் கம்பளிப் புழுக்களால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டெர்பிஷையர் என்ற இடத்தில் கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த புழுக்களால் மனிதர்களுக்கு உடலில் தடிப்பு, அரிப்பு, வாந்தி, சுவாசப்பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கம்பளிப் புழுக்களில் மேல் உள்ள ரோமங்களில் தாமென்டோபோயின் என்ற நச்சு உள்ளதால் அவை காற்றில் பறந்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
மேலும் இந்த வகை புழுக்கள் அதிகம் காணும் மரங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புழுக்கள் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தாவர சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments