ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.! விலை உயர்வைத் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அவசியம்.!

0 2024

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் பேசக்கூடாது என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அவசர அவசியம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 இந்து, கிறிஸ்துவ ஜோடிகளுக்கு அவரவர் மத வழி முறைப்படி, இலவச திருமணம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தண்ணீர் விட மாட்டோம் என கர்நாடகா அரசு மறுக்க முடியாது என்றும், அவ்வாறு கூற அந்த மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். அரசியல் லாபத்திற்காக, தமிழக நலனை, முதலமைச்சர் அடமானம் வைத்துள்ளதாக, அண்ணாமலை கூறினார்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வேளாண் சட்டங்களில் ஒன்றாக கொண்டுவரப்பட்டு முடக்கப்பட்ட, அத்தியாவசி பொருட்கள் சட்டம் அவசியம் என அண்ணாமலை வலியுறுத்தினார்.

தமிழ்நாடு ஆளுநர் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை, அப்படி பேசிக் கொண்டிருந்தால், அது தவறான மரபாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments