பப்ஜி மூலம் ஏற்பட்ட காதலால் 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது

0 13508

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனுடன் வாழ 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண், எல்லையை சட்டவிரோதமாக கடக்க யூடியூப்பில் இருந்த தகவல்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ரபுபுராவில் கடந்த மே மாதம் முதல் வசித்து வந்த சீமா என்ற பாகிஸ்தான் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் நிலையில், பப்ஜி மூலம் அறிமுகமான சச்சின் சிங் என்பவருடன் சேர்ந்து வாழ சீமா இந்தியா வந்தார். மளிகைக்கடையில் தினக்கூலியான சச்சினுக்கு சீமாவை திருமணம் செய்துவைக்க சச்சினின் தந்தை சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் சீமா, சச்சின், அவரது தந்தை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது யூடியூபில் கூறிய வழிமுறைகளை பின்பற்றி பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்று அங்கிருந்து பேருந்து வழியாக டெல்லி வந்ததாக சீமா தெரிவித்தாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments