பைக்கில் சென்ற நபரிடம் வழிப்பறி... கத்தியைத் தூக்கி கெத்து காட்டிய புள்ளிங்கோஸ்... மனிதாபிமானத்துடன் மாவுக்கட்டு போட்ட போலீசார்...!

சென்னை பள்ளிக்கரணையில், பைக்கில் சென்றவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 2 தங்க மோதிரங்களுடன் பட்டாக்கத்தி மற்றும் மதுபாட்டில்களை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு கெத்து காட்டிய 3 புள்ளிங்கோக்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் சதீஷ்குமார் என்பவர் தனது நண்பருடன் பள்ளிக்கரணை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த 3 பேர், சதீஷை கத்தியால் வெட்டி 2 தங்க மோதிரங்களை பறித்துக் கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த போலீசார், ஒரு பார்க்கில் போதை தலைக்கேறி நிதானத்தை இழந்து படுத்துக் கிடந்த மூவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் விக்னேஷ், கின்ஸ்லி பால் மற்றும் விஷ்ணு என்பதும், வழிப்பறி செய்த மோதிரங்களையும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தியையும் கொண்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு கெத்து காட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவனான விக்னேஷ், வழிப்பறியில் ஈடுபட்டு சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments