கோலாகலமாக கொண்டாடப்பட்டது அமெரிக்காவின் 247-வது சுதந்திர தினம்

அமெரிக்காவின் 247-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் இரவு வானை வண்ணமயமாக்கும் வகையில் வாண வேடிக்கைகளை கண்டு மகிழ்ந்தனர்.
லிங்கன் நினைவிடத்தில் உள்ள குளத்தின் இருபுறமும் 17 நிமிடங்கள் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
சிகாகோ நகரில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லாத போதும், சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி அந்நகர மக்கள் பல்வேறு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்த பதின்மூன்று காலனிகள் 1776-ஆம் ஆண்டு இனி பிரிட்டனின் மன்னரான மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கு கீழ்படிந்தவை அல்ல என்றும் தாங்கள் ஒன்றுபட்ட, சுதந்திரமான அரசுகள் என்றும் பிரகடனப்படுத்தியதை நினைவு கூரும் வகையில் ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments