அமெரிக்காவில் மனைவி, குழந்தைகள் கண் முன்னே மலையிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு..!

0 1555

அமெரிக்காவின் அருகே மனைவி மற்றும் 5 குழந்தைகளின் கண் முன்னே மலையில் இருந்து கால் தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.

கோடை விடுமுறையை ஒட்டி, ஜெரார்டோ ஹெர்னாண்டஸ் என்ற 40 வயது நபர் தனது குடும்பத்துடன் ஓரிகான் மாகாணத்தில் உள்ள மல்ட்னோமா நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

620 அடி உயர நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள நடைபாதையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஜெரார்டோ, நடைபாதையிலிருந்து கால் இடறி மலையில் இருந்து கீழே விழுந்தார்.

ஜெரார்டோ எங்கு விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால், மீட்பு படையினரும், தீ அணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். 45 நிமிட தேடுதலுக்கு பின்னர் ஜெரார்டோ ஹெர்னாண்டசின் உடலை அவர்கள் கண்டுபிடித்தனர். அவர் கால் தவறி விழுந்ததற்கு மதுபோதையே காரணம் என மீட்பு படையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments