காசாவில் ஆயுத உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்..!

பாலஸ்தீன நகரமான காசாவில் உள்ள நிலத்தடி ஆயுத உற்பத்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன நகரமான ஜெனினில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் 9 பேர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் படைகள் ஜெனின் நகரில் இருந்து பின்வாங்கியதும், காசாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
அந்த தாக்குதலை முறியடித்த இஸ்ரேல் இராணுவம், அதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹிமாஸ் படையின் ஆயுத உற்பத்தி நிலையத்தை போர் விமானம் மூலம் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
Comments