அமெரிக்காவில் இந்திய துணை தூதரகத்துக்கு தீவைப்பு...!

0 1816

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைத்தனர்.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று அதிகாலை 1-30 முதல் 2-30 மணிக்குள் இந்த தீவைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது .

இந்த தீ வைப்பை  பதிவிட்டு ஆடியோவுடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தீ வைக்கப்பட்ட தகவல் அறிந்த சான்பிரான்சிஸ்கோ தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று  தீயை அணைத்தனர். இதனால் உயிர்சேதம் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments