கோவிலுக்குள் புகுந்த பாம்பு.. அடுத்து நடந்த டுவிஸ்ட்..! வாயை பிளந்ததால் பரபரப்பு
திருப்பூர் அடுத்த தாராபுரத்தில் பழமையான சிவன் கோவிலுக்குள் புகுந்த பாம்பு ஒன்று அம்மன் பீடத்தை சுற்றிக்கிடப்பதை பார்த்து பக்தர்கள் பால் வாங்கி ஊற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவிலில் தான் அம்மன் பீடத்தை சுற்றியபடி பாம்பு படுத்திருந்த காட்சிகள் தான் இவை..!
பங்காளிச்சண்டையால் கடந்த சிலஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டப்பட்டிருந்த இந்த கோவிலுக்குள் பாம்பு ஒன்று செல்வதை கண்ட சிலர் உள்ளே சென்று பார்த்ததாகவும், பார்ப்பதற்கு மலைப்பாம்பு குட்டி போல காணப்பட்ட அந்த பாம்பு, கோவிலில் உள்ள அரிவாளுடன் கூடிய அம்மன் பீடத்தில் ஏறி சுற்றியபடி படுத்துக்கிடந்ததாகவும் கூறப்படுகின்றது.
தன்னை கையெடுத்து கும்பிட்ட பக்தர்களின் பரவசத்தை கண்டு காண்டான பாம்பு, வாயை திறந்து கொட்டாவி விட்டதை பார்க்கும் போது அப்படியே சாப்பிட்டு விடுவேன் என்பது போல இருந்தது.
பீடத்தை சுற்றிபடுத்திருந்த பாம்பை நாகராஜாவாக பாவித்து பால் ஊற்றியதும், பாம்பு விட்டால் போதும் என அந்த இடத்தை காலி செய்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்புதுறையினர் அந்தப் பாம்பை பிடித்து பிளாஸ்டிக்பைப்பிற்குள் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச்சென்றனர்.
ரொம்ப பயங்கரமான பாம்பா இருக்குமோ..? என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் பிடிப்பட்ட பாம்பு கடிக்கும் தன்மை கொண்ட விஷமற்ற மண்ணுளி பாம்பு என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
Comments