சமூக நீதி பேசும் திருமாவளவன் இப்படி பேசலாமா ..? திருமண ஆசையை வெளிப்படுத்தினார்
மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் தனது திருமண ஆசை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ள தகுதி இல்லாதவர்கள் என்பது போல கூறிவிட்டு, அப்படி பேசக்கூடாது என்று அவரே பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.
மதுரையில் மேலவளவு போராளிகளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
அப்போது அவர் தனது திருமண ஆசைகுறித்து பேசிய போது மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ள தகுதி இல்லாதவர்கள் என்பது போல கூறிவிட்டு, அப்படி பேசக்கூடாது என்றும் அவரே கூறினார்
பெருந்தலைவர் காமராஜர் போன்று மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் ஒன்று இரண்டு பேர் தான் என்றார் திருமாவளவன்
இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சுக்கு, டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த தீபக் நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் போது அவர்கள் திருமணத்திற்கு தகுதி அற்றவர்கள் என்று வேதனைப்படுத்தும் சொற்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
Comments