''மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்...'' - இபிஎஸ்

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பைத்தெரிவிக்காத தி.மு.க அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாக சிவக்குமார் கூறுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வரும் நீரில் தமிழகம் செயல்படுத்தும் குடிநீர் திட்ட ங்களை குறைசொல்ல கர்நாடகாவுக்கு உரிமை கிடையாது என்றும், தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க அ.தி.மு.க அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments