தாத்தா.. தாத்தா... மு.க.ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்த சிறுமி..!

0 2178
தாத்தா.. தாத்தா... மு.க.ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்த சிறுமி..!

சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து திமுக தொண்டரின் மகள்  ஒருவர், தாத்தா என்று உரிமையோடு அழைத்த நிலையில், அந்த 2 ஆம் வகுப்பு மாணவியை குடும்பத்துடன் அழைத்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தாத்தா என்ற ஒற்றை அழைப்பால் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை கவர்ந்த சிறுமி இவர் தான்..!

சேலத்தில் இருந்து முதல் அமைச்சரை காணும் ஆவலில் மிர்லாதேவி - கோகுல் குமார் தம்பதி தங்கள் மகளுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர். அறிவாலயத்தில் இருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் முதல்வரை எப்படி சந்திக்க போகிறோம் என்று காத்திருந்தனர்.

அப்போது அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் காரில் வந்திறங்கினார். அவரை கண்ட உற்சாகத்தில் மிர்லாதேவியின் கைகளில் இருந்த சிறுமி உணர்ச்சி வசப்பட்டு தாத்தா... தாத்தா என்று பாசத்துடன் அழைத்தார்

சிறுமியின் அந்த உரிமையான அழைப்பு முதல் அமைச்சரை வெகுவாக கவர்ந்தது, அவர் அந்த சிறுமியை அழைத்து வர கூறியதால், அவரது பாதுகாவலர்கள் சிறுமியையும் அவரது பெற்றோரையும் முதல் அமைச்சரிடம் அழைத்துச் சென்றனர்

முதல் அமைச்சரை சந்தித்த பின்னர் வெளியேவந்த சிறுமியின் தாய் மிர்லாதேவி,முதல்முறை முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments