மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபோதையில் ரகளை.. இளைஞரின் இரு சக்கர வாகனம் பறிமுதல்..!
நாகர்கோவிலில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நபரின் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வந்த மேலராமன்புதூரைச் சேர்ந்த இயேசு ராஜா என்ற இளைஞர், தனது டூவீலர் மீது அரசு வாகனம் மோதி விட்டதாகவும், அதனை தேடி வந்திருப்பதாக வாசலில் இருந்த காவலர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயற்சித்த போலீஸாரை இயேசு ராஜா தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரது இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்ததுடன், உறவினர்களை வரவழைத்து எச்சரிக்கை செய்து இயேசு ராஜாவை அனுப்பி வைத்தனர்.
Comments