7 வயது முதலைக்குட்டியை இளவரசியாக பாவித்து திருமணம் செய்துகொண்ட மேயர்..!

மெக்சிகோ நாட்டில் பழங்கால நம்பிக்கையின்படி, இயற்கையின் அருளைப் பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக் குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து கொண்டார்.
மெக்சிகோவின் தெற்கே அமைந்துள்ள ஓக்சாக்கா மாகாணத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர்.
இயற்கையின் பிரதிநிதியாக முதலையை கருதும் அவர்கள், அதனுடன் மனிதனுக்கு திருமணம் செய்துவைத்தால் இயற்கை வளங்கள் பெருகும் என பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதன்படி 7 வயது முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து, அதற்கு திருமண ஆடை அணிவித்து, சான் பெத்ரோ ஹூவாமெலூலா நகர மேயர் விக்டர் சோசா திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்ட முதலைக்கு அவர் முத்தமும் இட்டார். மேள தாளங்கள் முழங்க, அந்த முதலையை மக்கள் கிராம சாலைகளில் ஊர்வலமாக தூக்கி சென்றனர்.
Comments