வெளிச்சந்தை விற்பனையில் பாதி அளவாக கிலோ 60 ரூபாய்க்கு பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை...!

0 1062

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெளிச்சந்தையை விட பாதி விலையாக, கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமாக சென்னையில் தக்காளியின் மொத்த விற்பனை விலை 100 ரூபாயாகவும், மக்களுக்கு வியாபாரிகள் விற்கும் சில்லறை விற்பனை விலை 120 ரூபாயாகவும் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதே வேளையில், வெளிச்சந்தை விற்பனையில் பாதி அளவாக, கிலோ 60 ரூபாய் என்ற விலையில் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4-வது நாளாக இந்த விலையில் தக்காளி விற்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். 

கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும், விலையேற்றம் இருந்தாலும் தொடர்ந்தாலும், இதே விலைக்கு விற்பனை செய்யப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments