தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 5-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாவும், ஜூலை 4-ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் ஞாயிறன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments