இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் அதிகரிக்கிறது: பிரதமர்

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர், 2014-ம் ஆண்டில், உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியாவிலிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாகவும், தற்போது அது 45-ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஒரு காலத்தில் பலவீனமான பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்த இந்தியா இன்று உலக பொருளாதாரத்தில் முதல் 5 இடங்களுக்குள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
விழாவின் போது டெல்லி பல்கலைக்கழகத்தில் கணினி மையம் உள்ளிட்ட 3 கட்டிடங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணித்து டெல்லி பல்கலைக்கழகத்திற்கு சென்றார். ரயிலில் மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.
Comments