மறு உத்தரவு வரும் வரை செந்தில்பாலாஜி டிஸ்மிஸ் உத்தரவு நிறுத்திவைப்பு - ஆளுநர்

0 2271

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் நேற்று உத்தரவிட்டார்.

இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், செந்தில்பாலாஜி விவகாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடித விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், அட்டார்னி ஜெனரலின் கருத்தை அறிந்து முடிவு எடுக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, செந்தில்பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும், ஆளுநர், தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments