''விஜய்யும் தாமும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம்..''- சீமான்

விஜய்யும் தானும் எப்போதும் அடித்துக் கொள்ள மாட்டோம் என்றும் இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருவள்ளூர் அருகே முதியவர் ஒருவரின் நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து கேட்டறியச் சென்ற சீமான், பின்னர் செய்தியாளரிடம் பேசினார்.
எத்தனையோ படங்களில் விஜய் புகைபிடிப்பது போலவும் மது அருந்துவது போலவும் நடித்துள்ளார் என்றும் அப்போதெல்லாம் பிரச்சனை செய்யாதவர்கள், அவர் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்ததாலேயே பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்றும் கூறினார்.
Comments