''நடராஜர் கோயிலை கட்டுப்படுத்த நினைப்பது நீதிமன்ற அவமதிப்பு..'' - அண்ணாமலை..!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தொடர்ந்து தலையிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில், அறநிலையத்துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சனம் முடிந்து 4 நாட்களுக்கு சிதம்பரம் கோயில் கனகசபை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ள அவர், 1959-ம் ஆண்டின் அறநிலையத்துறை சட்டவிதியின்படி, இந்து சமய உட்பிரிவுகள் நிர்வகிக்கும் கோயில்களில், தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவில்களில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Comments