ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் மம்தா பானர்ஜி காயம்

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயமடைந்தார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜல்பைகுரி சென்ற அவர், அங்கிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டார். அப்போது, மோசமான வானிலை காரணமாக சிலிகுரி அருகே விமானத் தளத்தில் ஹெலிகாப்டரை விமானி அவசரமாகத் தரையிறக்கினார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மம்தா நேற்று சிகிச்சை பெற்றார். முழங்காலிலும் இடுப்பிலும் அடிபட்டிருப்பதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவர் வீடு திரும்பினார்.
உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பிய பாஜக தேர்தல் நேரத்தில் மம்தாவுக்கு இப்படியெல்லாம் நேர்வதாக விமர்சித்துள்ளது. இதனிடையே மம்தா விரைவில் குணம் அடைய விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments