மத்தியப் பிரதேசம் போபாலில் இருந்து புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகருக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்தும் காணொலி வாயிலாகவும் தொடங்கி வைக்க உள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் சென்னை ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த 5 புதிய ரயில்களும் கோவா-மும்பை, பாட்னா-ராஞ்சி , போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர்.
பெங்களூர்-தார்வாட் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.இந்த ரயில்களை அடுத்து வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்க உள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் பங்கேற்கவிருந்த மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Comments