தேவதைகளாக பார்க்க வேண்டாம்.... உதாசீனப்படுத்தாதீர்கள்.... ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரின் கண்ணீர் அனுபவங்கள்...!
தேவதைகளாக தங்களை பார்க்க வேண்டாம்.. ஆனால், உழைப்பவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள் என்கிறார் சென்னையில் ஆட்டோ ஓட்டும் மீனாட்சி. ஒரு பெண்ணாக ஆட்டோ ஓட்டுநர் தொழிலில் எதிர்கொள்ளும் சவால்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார் அவர்.
ஆணுக்கு இங்கே பெண் சளைப்பில்லை காண் என்று கும்மி கொட்டும் இவர், மீனாட்சி. சென்னை புரசைவாக்கத்தில் 28 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் அனுபவங்களை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார் மீனாட்சி.
காலை 6-45 மணிக்கு ஆட்டோவை எடுத்து சவாரியை ஆரம்பிக்கும் இவர் இரவு 9-45 மணி வரை ஓட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் கூறினார். தங்களை தேவதைகளாக பார்க்காவிட்டாலும் கேவலப்படுத்தி புறக்கணிக்கணிக்கவோ உழைப்பவர்களை உதாசீனப்படுத்தவோ வேண்டாம் என்பதே இவரது ஒரே கோரிக்கை.
உழைக்கும் பெண்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ அரசோ தன்னார்வர்களோ வகை செய்ய வேண்டும் என்பது இவரது வேண்டுகோள்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்தும் மட்டும் அல்ல... கடின உழைப்பு தேவைப்படும் துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு பெண் ஆட்டோ ஓட்டுநர் மீனாட்சி ஒரு உதாரணம் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள். பாலிமர் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகுமாரன்
Comments