தம்பதியினரிடம் வழிப்பறி செய்ய முயற்சி... ரூ.20 மட்டுமே இருந்ததால் மனமிறங்கி தங்களிடமிருந்த 100 ரூபாயை கொடுத்து விட்டு சென்ற திருடர்கள்..!

டெல்லியில், சாலையில் தனியாக சென்ற தம்பதியினரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற போதை ஆசாமிகள், தம்பதியிரிடம் 20 ரூபாய் மட்டுமே இருந்ததால், மனம்மாறி தங்களிடமிருந்த 100 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றனர்.
சம்பவத்தன்று, ஷாதாராவில் உள்ள ஃபார்ஷ் பஜார் வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியை வழிமறித்த இரு போதை ஆசாமிகள், துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களிடம் பணம் பறிக்க முயன்றனர். தம்பதியினரின் உடமைகளை சோதித்த போது 20 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
இதனால், மனமிறங்கி தங்களிடம் இருந்து 100 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றனர். இருவரும் மற்ற பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததை சிசிடிவி காட்சிகளின்படி கண்டுபிடித்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, துப்பாக்கி, 30 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments