மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை...!

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய பிரதமர், இன்று காலை தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, பிரதமரை சந்தித்த அமித்ஷா, மணிப்பூரின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விவரித்தார். மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், அமித் ஷாவை நேற்று சந்தித்து, மாநிலத்தின் சூழல் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Comments