டெல்லி மற்றும் மும்பையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை....!

மும்பை மற்றும் டெல்லியில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை, 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதியன்று மும்பை மற்றும் டெல்லியில் பருவமழை தொடங்கியதாகவும், அதற்கு பிறகு ஜூன் 25 ஆம் தேதியான இன்றைய தினம், இரு பெரு நகரங்களிலும் பருவமழை ஒரே நாளில் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடங்கியள்ள மழை, விடாமல் கொட்டித் தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது.
டெல்லியில் தொடங்கிய பருவமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புது டெல்லி ரயில் நிலையத்திற்கு நண்பர்களுடன் காலை 5 மணி அளவில் சென்ற சாக்சி அகுஜா என்ற பெண், தேங்கிய தண்ணீரை தாண்டியபோது மின் கம்பம் ஒன்றை பிடித்தார். அப்போது அதில் மின்கசிவு இருந்ததால் தூக்கி வீசப்பட்ட அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Comments