மதுபோதையில் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசப் பேச்சு.... தன்னை திட்டிய இளைஞர் என நினைத்து வேறொரு இளைஞர் மீது சரமாரி தாக்குதல்....!

கள்ளக்குறிச்சியில், ராங் நம்பரில் தன்னை திட்டிய இளைஞர் என நினைத்து வேறொரு இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மையனூரைச் சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞர் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கிய நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் அந்த எண்ணுக்கு தவறுதலாக தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் மதுபோதையில் அடிக்கடி அதே எண்ணை தொடர்பு கொண்டு அய்யப்பனை ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், அய்யப்பன் அந்த சிம் கார்டை தனது நண்பரான குபேந்திரன் என்பவரிடம் கொடுத்துவிட்ட நிலையில், வழக்கம் போல ஆகாஷ் அந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார்.
அப்போது குபேந்திரன் திட்டியதால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தன்னை அய்யப்பன் தான், திட்டியதாக நினைத்து, இயற்கை உபாதையை கழிக்க வந்த ஐயப்பனை, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து மரக்குச்சியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஐயப்பனின் நண்பர்கள் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.
Comments