வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பால் நீர் நிலைகளை நாடிய மக்கள்... இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை....!

ஸ்பெயினின் பார்சிலோனாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் நீர் நிலைகளை நாட தொடங்கியுள்ளனர்.
பார்சிலோனிடா கடற்கரையில் திரண்ட பலர் கடலில் குளித்து வெப்பத்தை தணித்து கொண்டனர். கால்பந்து, அலைச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளில் சிலர் பொழுதை போக்கினர்.
இதனிடையே, ஸ்பெயினில் 1961 ஆம் ஆண்டிற்கு பிறகு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
Comments