ரஷ்யாவில் இருந்து வாக்னர் குழு வெளியேறியதால் மக்கள் மகிழ்ச்சி... கிளர்ச்சியை கைவிட்டு உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்பியது வாக்னர் குழு...!

0 1718

ரஷ்யாவில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் வெளியேறியதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் 2,000 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய அந்நாட்டு கூலிப்படையான வாக்னர் குழு, ரோஸ்டாவ் நகரை கைப்பற்றியது.

இதனால், போர் பதற்றம் உருவானதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், பெலாரஸ் அதிபர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மீண்டும் உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்ப ஒப்புக் கொண்ட வாக்னர் குழு, ஆயுதங்களுடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது.

அப்போது, கார் ஹார்ன்களை ஒலித்து ஆரவாரம் செய்த மக்கள், உற்சாகத்துடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments