அ.தி.மு.க. ஆட்சி குறித்து விவாதம் நடத்தத் தயார் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா? என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி தெற்கு ஒன்றியத்தில், தோரமங்கலம் பகுதியில் பேசிய அவர்,அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர்.5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை அறிவித்தோம் அவற்றை திமுக அரசு நிறுத்திவிட்டது என்றார்.
Comments