போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் ஊற்றிக் கொண்ட டிக்-டாக் சூர்யாதேவி.. என்னதான்பா பிரச்சனை இவங்களுக்கு...?

0 2289

கணவர் மீது கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மணப்பாறையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து போலீஸாரை மிரட்டியதாக கூறப்படும் டிக்-டாக் பிரபலம் சூர்யாதேவி, தன் உடலில் பெட்ரோல் ஊற்றிய நிலையில், பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீஸார் கைது செய்தனர்...

இரண்டு பெண் போலீஸார் கைகளை பிடித்துக் கொள்ள மற்றொரு போலீஸ் குழாய் மூலமாக குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் டிக்-டாக் பிரபலம் சூர்யாதேவி...

டிக்-டாக் தடை செய்யப்பட்டதால் மற்ற செயலிகளில் பிறரை பற்றி விமர்சித்து பிரபலமானவர் இந்த சூர்யாதேவி. இவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்ததாகக் கூறி கணவர் மருதுபாண்டி, கணவரின் சகோதரர் தேவா ஆகியோர் சூர்யாதேவியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. அவர்கள் இருவரும் தன்னை அடித்ததாகக் கூறி திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் கடந்த 21 ஆம் தேதி புகார் அளித்தார் சூர்யாதேவி.

அதே காவல் நிலையத்தில் சூர்யாதேவி, தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாக தேவாவின் மனைவி கிருத்திகாவும் புகார் அளித்துள்ளார்.

வெள்ளியன்று காவல் நிலையம் சென்ற சூர்யாதேவி, நான் கொடுத்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக் கேட்டு பணியில் இருந்த காவலர்களை திட்டியதாக கூறப்படுகிறது. திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த பாட்டிலில் உள்ள பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டதாகவும் தெரிகிறது.

விரைந்து செயல்பட்ட போலீஸார், ஓஸ் மூலமாக அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து மீட்டு சமாதானம் செய்தனர்.

பின்னர் சூர்யாதேவி தரக்குறைவாக பேசியதாகக் கூறி ஏட்டு லாரான்ஸ் மேரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சூர்யா தேவியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

ஏற்கனவே ஒருமுறை, தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார் சூர்யாதேவி. விபரீதம் நடப்பதற்குள் மீட்க வேண்டுமென நினைத்து வீட்டின் கதவை உடைத்து தாங்கள் உள்ளேச் சென்று பார்த்த போது, அங்கு சூர்யா தேவி தூங்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments