சுங்கக் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை கடக்க முயன்ற காரை மறித்த ஊழியர்களைத் தாக்கிய திமுக பிரமுகர்...!

திமுக பிரமுகர் ஒருவர் தங்களை தாக்கியதாகக் கூறி வேலூர் அருகே உள்ள சுங்கச்சாவடி ஒன்றின் ஊழியர்கள் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வேலூர் - ஆரணி சாலையில் வல்லம் என்ற இடத்தில் அந்த டோல்கேட் உள்ளது. அணைக்கட்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மணிமாறன் அவ்வழியாக வேலூருக்கு சென்ற போது டோல் பிளாசாவில் இருசக்கர வாகனங்கள் செல்லும் ஃப்ரீ லேனில் சென்றதாகத் தெரிகிறது.
அப்போது டோல் கேட் ஊழியர்கள் கட்டணம் செலுத்தும் வழியாக வருமாறு கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக பிரமுகர் மணிமாறன் தங்களை தாக்கியதாகவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து ஊழியர்கள் அனைவரும் டோல்கேட் விட்டு வெளியேறி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
Comments