அசிங்கமாக தோற்றமளிக்கும் நாயை தேர்ந்தெடுக்க விநோத போட்டி... Chinese Crested இனத்தைச் சேர்ந்த நாய்க்கு முதல் பரிசு...!

0 1648

உலகிலேயே அசிங்கமாக தோற்றமளிக்கும் நாயை தேர்ந்தெடுப்பதற்காக கலிஃபோர்னியாவில் விநோத போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தாங்கள் அன்பாக வளர்க்கும் நாய்களுடன் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாக்கை துருத்திக்கொண்டும், வாயில் எச்சில் வழிந்துகொண்டும் போட்டியில் பங்கேற்ற நாய்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

உடல் குறைபாடு கொண்ட நாய்களும் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், உடலில் முடி இல்லாத Chinese Crested இனத்தைச் சேர்ந்த ஸ்கூட்டர் என்ற 7 வயது நாய் முதல் பரிசை வென்றது.

செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு கொண்ட ச்சிஹுவா என்ற நாய் 3-ம் பரிசை வென்றது. மனிதர்களுக்கு கொடுக்க நாய்களிடம் நிறைய அன்பு உள்ளதாக நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments