ஜாமீன் கையெழுத்து போட வந்தவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் மருது சேனை நிறுவன தலைவர் கைது...!

காரைக்குடியில், இளைஞர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மருது சேனை நிறுவன தலைவர் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியைச் சேர்ந்த வினீத் என்ற இளைஞர், கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு கடந்த 18 ஆம் தேதி சென்றிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை கொலை செய்து விட்டு காரில் தப்பியது.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த காரைக்குடி போலீஸார், தலைமறைவாக இருந்து வந்த ஆதிநாராயணன் மற்றும் மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் விஜயாவின் மகன் தனுஷ் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் பற்றி கேட்ட போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், விருதுநகர் நகராட்சி சந்தையை ஏலம் எடுப்பதில் இருதரப்புக்கும் இடையே தகராறு முற்றியதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலை வழக்கில் ஒன்றில் சிறையில் இருந்த வினித், ஆதிநாராயணனை கொலை செய்ய சிறையிலேயே திட்டம் தீட்டியதாகவும் இது பற்றி தெரிந்து கொண்ட ஆதிநாரணயணன் முந்திக் கொண்டு தமது ஆட்களை வைத்து வினித்தை படுகொலை செய்ததாகவும் போலீசார் கூறினர்.
Comments