விரைவுச் சாலையில் தரையிறக்கப்பட்ட விமானப்படை விமானங்கள்... அவசர காலங்களில் தரையிறக்குவது தொடர்பாக பயிற்சி....!

அவசர காலங்களில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் போர் விமானங்களை தரையிறக்குவது தொடர்பாக இந்திய விமானப்படை பயிற்சி மேற்கொண்டது.
உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் சுல்தான்பூர் அருகே இந்த பயிற்சி நடத்தப்பட்டது. தரையிறங்கிய வேகத்தில் மீண்டும் வானில் பறக்கும் பயிற்சியிலும் விமானப்படையினர் ஈடுபட்டனர்.
பயிற்சியில் மிரேஜ் ரக போர் விமானங்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில வகை விமானங்களையும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது.
Comments